Sunday, October 9, 2011

'டவுசர் பாண்டிகள்'


ஷார்ட்ஸ், பெர்முடாஸ், 3/4 ... என்று பல பெயர்களில் அறியப்படும் 'டவுசர்' பலவிதத்தில் உபயோகிப்பவர்களுக்கு சௌகர்யம் என்றாலும் ....பல சங்கடங்களும் உண்டு.

80 களில், பள்ளி படிப்பின் போது, 10 -ம் வகுப்பு வரை அரை நிஜார் தான். முழுக்கால் சட்டை போட 11 - ம் வகுப்பு சேரக்க்காத்திருக்க வேண்டும். ஏழாம் வகுப்பிற்கப்புரம் இந்த பொறுமை நிறையவே சோதிக்கப்படும்.  இப்பொழுதெல்லாம் என் 4 வயது மகன் கூட முழுக்கால் சட்டை தான் வேண்டும் என்கிறான். 

ஆனால் 25 வயது முதல் 75 வயது வரை உள்ள 'நம்மவர்'கள், இந்த டவுசரையே விரும்புகிறார்கள்...அது ஏன் என்று அலசி, ஆராய்ந்து, கேட்டு, கண்டு, அனுபவித்ததில் கிடைத்த பதில்கள்...பலதும் தெரிந்தவை...சிலது 'தெரியாத'வை. [டவுசரும்  அப்படித்தானே !]

Bacherlor's Choice:
 லுங்கியோ, வேஷ்டியோ கட்டினால், நல்ல அந்தஸ்துதான்...ஆனால் காலை எழுதிருப்பதற்க்குள், சில 'அந்தஸ்து' உள்ள பெண்கள் போல....ஓசையின்றி காலை 5 மணிக்குள் டைவர்ஸ் வாங்கிவிடும்...ஸோ எங்களுக்கெல்லாம் 'டவுசர்'தான் பத்தினி.


Married Man's Choice


இது கொஞ்சம் dangerous category . இவர்களில் சிலர் கோவிலுக்கு கூட டவுசர் தான். ஷாப்பிங் மால், சினிமா, வாக்கிங், காய்கறி கடை எல்லாத்துக்கும் டவுசர் தான். ஆபீசில் 'இதை' Business -casual ஆக அறிவிக்காத்தில் இவர்களுக்கு  கொஞ்சம் வருத்தம் தான். :-) 

50 Plus

'இனிமே நமக்கு வாழ்க்கைல என்ன இருக்கு' என்று மனப்பக்குவம்(விரக்தி ?!) அடைந்தவர்கள். ஆனா இவங்க பண்ணற அழிச்சாட்டியம் தான் ரொம்ப ஜாஸ்தி. இரண்டு நாள் முன்னாடி அதிகாலை jogging போய் கொண்டிருந்த ஒரு மாமாவை பார்த்ததும் பயங்கர ஷாக். வைட் கலர் டவுசர். வேஷ்டி துணி மாதிரி...கொஞ்சம் பெரிய சைஸ் சட்டை. அதனால் டவுசர் 'மினி ஸ்கர்ட்' போல காட்சி அளித்தது. மாமா வேற தொந்தியும் தொப்பயுமா ....மலையாளப்பட கதாநாயகன் range -க்கு... 

சில குச்சிக்கால் தாத்தாக்கள் போடும் ஓவர்-சைஸ் டவுசர் கலக்கல் தான் :-) 

இவர்கள் எல்லாருக்கும் டவுசர் ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும்...இதற்க்கு எதிராக ஒரு சங்கமும் இருக்கிறது...அதுதான் 'சங்கடத்திற்குள்ளனோர் சங்கம்' :-)



சங்கட சங்கத்தின் உறுப்பினர்கள் 

நடுத்தர வயது மாமிகள், ஆன்டிகள், teenage பெண்கள்  : 
"F3 பிளாக் மாமா ஷார்ட்ஸ் -ங்கற பேர்ல அறையும் குறையுமா நின்னுண்டு பல்ல காமிக்கறது பத்திண்டு வரது மாமி நேக்கு."
"இனிமே உங்க friend அ நேரமகெட்ட நேரத்தில வீட்டுக்கு கூப்பிடாதீங்க. கரு கருன்னு கரடி மாதிரி முடிய வெச்சிண்டு , கருப்பு கலர் ல shorts அ வேற போட்டுண்டு வரார்...எனக்கு என்னவோ அவர் half -naked ஆ வர மாதிரி இருக்கு"
"அந்த ஆளு டவுசர் போடறது கூட பரவாயில்லைடி. ஆனா அடிக்கடி அதை மேல ஏத்தி சொரிஞ்சுக்கறது தான் ...சகிச்சுக்க முடியலை. 

கோவில் குருக்கள்: "வேஷ்டி கட்டிண்டு வர வேண்டாம் ஸ்வாமி...ஒரு pant -ஆவது போட்டுண்டு வரலாமே...கலி முத்திடுத்து " 

கிராமத்து அப்பாவி : "வர வர எதுவும் சரியில்லை...நாகரீக கோமாளித்தனம் ரொம்பவே முத்தி போச்சு"  

இவர்களின் மிரட்டல் வேண்டுகோள் 

"நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்...உடனே நிறுத்தணும்"......இது நடக்காது என்பதால் :-)

அன்பான...ஆணித்தரமான வேண்டுகோள் 

1 ) உங்கள் உடலுக்கும், நிறத்துக்கும், வயதுக்கும்  ஏத்த மாதிரி டவுசர் போடுங்கள் 
2 ) முடிந்தவரை track -suit போடுங்கள்..  at least 3/4 

பி.கு : நானும் ஒரு டவுசர் பா(ர்ட்)ண்டிதான் :-)))


3 comments:

  1. இதுல நீ எந்த வகை மச்சி...

    ReplyDelete
  2. இது என்னடா இது வம்பா போச்சு?பொண்ணுங்க மினி ஸ்கர்ட் , மைக்ரோ மினி ஸ்கர்ட் எல்லாம் போடறாங்க , ஆண்கள் வீட்ல குட போடமாட்டோம் அந்த மாதிரி ஷர்ட் , உள்ள இருக்கறது எல்லாம் தெரியுற மாதிரி போடறது , ஸ்லீவ் லேஸ் போடறன்ர பேருல எது ஏதோ போடறது , என்னகேட்டா பொண்ணுங்க போடற டவுசர விட பசங்க போடற டவுசர் சைஸ் ஜாஸ்தியதான் இருக்கு , இது தவறு இல்ல அப்டீங்கறது என்னோட ஆணித்தனமான கருத்து.

    ReplyDelete
  3. பிரபா: மச்சி...நாம எல்லாம் dangerous category தானே! :-)

    நிர்மல்: உங்க வருத்தம் எனக்கு புரியுது...பட்,பொண்ணுங்க என்ன போட்டாலும் (போடாட்டியும் :P ) யாரும் ஒன்னும் சொல்லறதில்லை....எல்லா ஆண்களும் பாவம் தான்

    ReplyDelete