Sunday, October 9, 2011

'டவுசர் பாண்டிகள்'


ஷார்ட்ஸ், பெர்முடாஸ், 3/4 ... என்று பல பெயர்களில் அறியப்படும் 'டவுசர்' பலவிதத்தில் உபயோகிப்பவர்களுக்கு சௌகர்யம் என்றாலும் ....பல சங்கடங்களும் உண்டு.

80 களில், பள்ளி படிப்பின் போது, 10 -ம் வகுப்பு வரை அரை நிஜார் தான். முழுக்கால் சட்டை போட 11 - ம் வகுப்பு சேரக்க்காத்திருக்க வேண்டும். ஏழாம் வகுப்பிற்கப்புரம் இந்த பொறுமை நிறையவே சோதிக்கப்படும்.  இப்பொழுதெல்லாம் என் 4 வயது மகன் கூட முழுக்கால் சட்டை தான் வேண்டும் என்கிறான். 

ஆனால் 25 வயது முதல் 75 வயது வரை உள்ள 'நம்மவர்'கள், இந்த டவுசரையே விரும்புகிறார்கள்...அது ஏன் என்று அலசி, ஆராய்ந்து, கேட்டு, கண்டு, அனுபவித்ததில் கிடைத்த பதில்கள்...பலதும் தெரிந்தவை...சிலது 'தெரியாத'வை. [டவுசரும்  அப்படித்தானே !]

Bacherlor's Choice:
 லுங்கியோ, வேஷ்டியோ கட்டினால், நல்ல அந்தஸ்துதான்...ஆனால் காலை எழுதிருப்பதற்க்குள், சில 'அந்தஸ்து' உள்ள பெண்கள் போல....ஓசையின்றி காலை 5 மணிக்குள் டைவர்ஸ் வாங்கிவிடும்...ஸோ எங்களுக்கெல்லாம் 'டவுசர்'தான் பத்தினி.


Married Man's Choice


இது கொஞ்சம் dangerous category . இவர்களில் சிலர் கோவிலுக்கு கூட டவுசர் தான். ஷாப்பிங் மால், சினிமா, வாக்கிங், காய்கறி கடை எல்லாத்துக்கும் டவுசர் தான். ஆபீசில் 'இதை' Business -casual ஆக அறிவிக்காத்தில் இவர்களுக்கு  கொஞ்சம் வருத்தம் தான். :-) 

50 Plus

'இனிமே நமக்கு வாழ்க்கைல என்ன இருக்கு' என்று மனப்பக்குவம்(விரக்தி ?!) அடைந்தவர்கள். ஆனா இவங்க பண்ணற அழிச்சாட்டியம் தான் ரொம்ப ஜாஸ்தி. இரண்டு நாள் முன்னாடி அதிகாலை jogging போய் கொண்டிருந்த ஒரு மாமாவை பார்த்ததும் பயங்கர ஷாக். வைட் கலர் டவுசர். வேஷ்டி துணி மாதிரி...கொஞ்சம் பெரிய சைஸ் சட்டை. அதனால் டவுசர் 'மினி ஸ்கர்ட்' போல காட்சி அளித்தது. மாமா வேற தொந்தியும் தொப்பயுமா ....மலையாளப்பட கதாநாயகன் range -க்கு... 

சில குச்சிக்கால் தாத்தாக்கள் போடும் ஓவர்-சைஸ் டவுசர் கலக்கல் தான் :-) 

இவர்கள் எல்லாருக்கும் டவுசர் ஒரு வரப்பிரசாதம் தான் என்றாலும்...இதற்க்கு எதிராக ஒரு சங்கமும் இருக்கிறது...அதுதான் 'சங்கடத்திற்குள்ளனோர் சங்கம்' :-)



சங்கட சங்கத்தின் உறுப்பினர்கள் 

நடுத்தர வயது மாமிகள், ஆன்டிகள், teenage பெண்கள்  : 
"F3 பிளாக் மாமா ஷார்ட்ஸ் -ங்கற பேர்ல அறையும் குறையுமா நின்னுண்டு பல்ல காமிக்கறது பத்திண்டு வரது மாமி நேக்கு."
"இனிமே உங்க friend அ நேரமகெட்ட நேரத்தில வீட்டுக்கு கூப்பிடாதீங்க. கரு கருன்னு கரடி மாதிரி முடிய வெச்சிண்டு , கருப்பு கலர் ல shorts அ வேற போட்டுண்டு வரார்...எனக்கு என்னவோ அவர் half -naked ஆ வர மாதிரி இருக்கு"
"அந்த ஆளு டவுசர் போடறது கூட பரவாயில்லைடி. ஆனா அடிக்கடி அதை மேல ஏத்தி சொரிஞ்சுக்கறது தான் ...சகிச்சுக்க முடியலை. 

கோவில் குருக்கள்: "வேஷ்டி கட்டிண்டு வர வேண்டாம் ஸ்வாமி...ஒரு pant -ஆவது போட்டுண்டு வரலாமே...கலி முத்திடுத்து " 

கிராமத்து அப்பாவி : "வர வர எதுவும் சரியில்லை...நாகரீக கோமாளித்தனம் ரொம்பவே முத்தி போச்சு"  

இவர்களின் மிரட்டல் வேண்டுகோள் 

"நிறுத்தணும் எல்லாத்தையும் நிறுத்தணும்...உடனே நிறுத்தணும்"......இது நடக்காது என்பதால் :-)

அன்பான...ஆணித்தரமான வேண்டுகோள் 

1 ) உங்கள் உடலுக்கும், நிறத்துக்கும், வயதுக்கும்  ஏத்த மாதிரி டவுசர் போடுங்கள் 
2 ) முடிந்தவரை track -suit போடுங்கள்..  at least 3/4 

பி.கு : நானும் ஒரு டவுசர் பா(ர்ட்)ண்டிதான் :-)))


Sunday, September 25, 2011

அமெரிக்க விஜயம் - ஆயத்தம்


ஸ்ரீ ராமஜயம் 
(எங்க அம்மா இந்த signature இல்லாம எழுதமாட்டாங்க)

அமெரிக்க விஜயம் - ஆயத்தம் 

பாஸ்போர்ட்! மகா படுத்தல், அலைச்சல். 1 -ம் தேதி apply பண்ணி 3 -ம் தேதி கிடச்சது (இதுக்கே சலிச்சுகிட்டா எப்படி?). எத்தனை போட்டோ?! கல்யாணத்தில் கூட இவ்வளவு போட்டோ கிடையாது. (1961 -ல்) . யானை (டிக்கெட்) வாங்கியாச்சு. அங்குசம் (விசா) வரதுக்குள்ள டென்ஷன். ஒரு வழியா எல்லாம் உறுதியாச்சு. ஊர் கூடி தேர் இழுத்து ... வேணுமா இந்த பயணம்ன்னு அலுத்து ...ஒரு வழியா கிளம்பியாச்சு. 

கடைசி பெண், பிள்ளை (நான் தான்), தம்பி, தம்பி பொண்டாட்டி எல்லாரும் வழியனுப்ப வந்து, வாழ்த்துக்கள், வேணும், வேண்டாத புத்திமதிகள் சொல்லி ...நானும் பாரின் போறேன் ....எல்லாரும் பாத்துக்கோங்க...

இவ்வளவுக்கும் காரணம் எங்க வீட்டு மேடம் (நம்ம மேடம் மாதிரியே இவங்களுக்கும் பிடிவாதம் ஜாஸ்தி)

இன்னும் பாயும் .....

ஸ்டார்ட் மியூசிக்

நிறைய blogs படிக்கறேன். சரி...நாமளும் எழுதலாம் னு ஒரு அல்ப்ப ஆசை. :-))) [ஆசை யாரை விட்டது?!]

முதல் ல குரு வணக்கம் போட்டுடலாம். எல்லாரும் ஒரு வகைல குரு தான். ஆனா முதல் குரு அம்மா தான் (10 மாசம் சுமந்த அம்மா பத்தி தான் சொல்லறேன். ஹே! ஹே! நோ பொலிடிக்ஸ் ப்ளீஸ்!!)

அம்மாவின் முதல் அமெரிக்க பயணக் கட்டுரை தான் என்னை எழுத தூண்டியது. என் தாய் பாய்ந்த 8 அடி, என்னுள் 16 அடி பாய முடியும் என்ற  நம்பிக்கை தருகிறது. பாக்கலாம் [முதல் அடி ஆரம்பிக்கறதுக்குள்ள 8 , 16 னு நம்பர் வேற !!! தலைவர் வேற சொல்லிருக்கார். எட்டு எட்டா பிரிச்சுக்கோ னு ]

எல்லாரும் கொஞ்சம் அனுக்கிரகனம் பண்ணனும் ப்ளீஸ் ....

முதல்ல 8 அடி பத்தி பாக்கலாம்...."wait and see !!!"